Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வரும் 20ம் தேதி திருவள்ளூருக்கு வருைக தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்; நிர்வாகிகளுக்கு அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வேண்டுகோள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காக்களூரில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் மா.ராஜி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, கே.ஜெ.ரமேஷ், தொகுதி பார்வையாளர் பிடிசி.செல்வராஜ், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பிரபு கஜேந்திரன், சி.ஜெரால்டு, வி.ஜெ.சீனிவாசன், எஸ்.ஜெயபாலன், த.எத்திராஜ். ஜி.ராஜேந்திரன். ஜி.விமல்வர்ஷன், எம்.முத்தமிழ்செல்வன், வி.குமார், ஜெ.மகாதேவன், காஞ்சனா சுதாகர், எஸ்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சா.மு.நாசர் பேசியதாவது: பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சென்னேரி குப்பத்தில் திமுக அலுவலகம் மற்றும் இளைஞர் அணி சார்பில் நூலகம், பாரிவாக்கம் மற்றும் சென்னேரிகுப்பத்தில் கலைஞரின் மார்பளவு வெண்கல சிலை ஆகியவற்றை இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வரும் 20ம் தேதி திறந்து வைக்க உள்ளார். மேலும் 102 பேருக்கு பொற்கிழி, 102 பேருக்கு அதிநவீன வசதி கொண்ட தையல் இயந்திரம், 50 பேருக்கு வாஷிங் மெஷின், 750 பேருக்கு மிக்சி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். எனவே நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு அவருக்கு வெகு விமரிசையாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

ஓரணியில் தமிழ்நாடு என்கிற முன்னெடுப்பில் இன்னும் அதிகளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி ஒன்றிய பாஜ அரசு செய்து வரும் அநீதிகளையும் பொதுமக்களிடம் எடுத்து கூறி உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஆவடி மேயர் ஜி.உதயகுமார், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் சன் பிரகாஷ், தி.வை.ரவி, டி.தேசிங்கு, சே.பிரேம் ஆனந்த், ப.ச.கமலேஷ், தங்கம் முரளி, என்.இ.கே.மூர்த்தி, ஜி.ஆர்.திருமலை, டி.முரளிகிருஷ்ணன், தி.வே.முனுசாமி, பேபிசேகர், பொன்.விஜயன், ஜி.நாராயணபிரசாத், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் கே.சுரேஷ்குமார், வழக்கறிஞர் என்.பி.மாரிமுத்து, வி.தியாகராஜன், ஏ.ஜி.ரவி, எம்.மோகன், எஸ்.சௌந்தரராஜன், வி.ஜே.உமாமகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.