Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சர்வதேச செஸ் போட்டிகளில் முன்னணி இடங்களை வென்ற தமிழ்நாடு செஸ் வீரர்களை வாழ்த்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நார்வே மற்றும் ஆர்மேனியா நாடுகளில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டிகளில் முன்னணி இடங்களை வென்ற தமிழ்நாடு செஸ் வீரர்கள் டி.குகேஷ், அரவிந்த் சிதம்பரம், ர.பிரக்ஞானந்தா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நார்வே செஸ் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்த நடப்பு இளம் உலக சாம்பியனும், மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது பெற்றவருமான திரு.டி. குகேஷ், ஸ்டீபன் அவாக்யன் நினைவு செஸ் போட்டியில் முதலிடம் பிடித்த அரவிந்த் சிதம்பரம் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த ர.பிரக்ஞானந்தா ஆகியோருக்கு இன்று (12.6.2025) வாழ்த்து தெரிவித்தார். அரவிந்த் சிதம்பரம், ஸ்டீபன் அவாக்யன் நினைவு செஸ் போட்டியில் முதல் இடத்தை பிடித்ததன் மூலம் தற்போது FIDE உலக தரவரிசை பட்டியலில் முதல் 10-தர இடங்களுக்குள் நுழைந்துள்ளார். திரு.அரவிந்த் சிதம்பரம் சென்னையில் கடந்த ஆண்டு SDAT யின் மூலம் நடத்தப்பட்ட சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் மாஸ்டர் பிரிவில் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டி.குகேஷ் மற்றும் திரு.ர.பிரக்ஞானந்தா இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான Elite திட்டத்தின்கீழ் பயன் பெற்று வருகின்றனர்.

சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள் தங்களை மேலும் தயார்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் எலைட் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 30.00 லட்சம் ரூபாய் வழங்கப்படுகின்றது, விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு தேவையான அதிநவீன உபகரணங்களை வாங்கிக் பயன்படுத்தவும், வெளிநாடுகளுக்கு சென்று சிறந்த பயிற்சியாளர்களிடம் பயிற்சி மேற்கொள்ளவும், தொடர்ந்து சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் எலைட் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகின்றது. நார்வே செஸ் போட்டி, ஸ்டீபன் அவாக்யன் நினைவு செஸ் போட்டி ஆகியவற்றில் முன்னணி இடங்களை வென்றதன் மூலம் உலக டாப் 10 தரவரிசையில் இருக்கும் நான்கு இந்திய வீரர்களில் மூன்று பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது விளையாட்டில் உலக அளவில் முன்னணி இடமாக தமிழ்நாட்டினை உருவாக்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முயற்சிகளுக்கு சிறப்பு சேர்பதாக அமைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு, ஜெ. மேகநாத ரெட்டி இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.