சென்னை: மாற்றுத்திறனாளி நலத்துறை செயலாளர் மதுமதி நேற்று வெளியிட்டுள்ள அரசாணை: தசைச்சிதைவு நோய் உள்ளிட்ட பல்வகைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு இயற்கை உபாதைகளை கழிக்கும் வகையிலான சக்கர நாற்காலி வழங்கும் திட்டம் 1000 மாற்றத்திறனாளிகளுக்கு ரூ.1.20 கோடியில் செயல்படுத்தப்படும். மூளை முடக்குவாதம் உள்ளிட்ட இதர குறைபாட்டினால் கால்கள் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலன் பொருந்திய சக்கர நாற்காலியாகவும், 3 சக்கர வாகனமாகவும் பயன்படுத்தக்கூடிய இணைக்கும் வசதி கொண்ட மின்கலனால் இயங்கும் உபகரணம் 600 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.30 கோடி மதிப்பில் வழங்கப்படும். சுயத்தொழில் மேற்கொள்ளுவதற்காக செயல்படுத்தப்படும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தினை விரிவுபடுத்தி 40 சதவிகிதத்திற்கு மேல் பாதிப்பிற்குட்பட்ட மூளை முடக்குவாதம், தசைச்சிதைவு நோய், புற உலக சிந்தனையற்ற/ மதி இறுக்கம் ஆகிய 2000 மாற்றுத்திறனாளிகள் அல்லது பெற்றோர்கள் பயன்பெறும் வகையில் ரூ.1.30 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.
Advertisement