Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ.75 லட்சத்தில் காபி, குருமிளகு பதப்படுத்தும் இயந்திரம் வழங்கப்பட்டது

*உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பயன்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.75 லட்சம் செலவில் காபி, குருமிளகு பதப்படுத்தும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து துறைகளின் வாயிலாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர விவசாயம் செழிக்க வழிவகை செய்யும் வகையில் பல்வேறு சிறப்பாக திட்டங்கள் தீட்டி செயல்படுத்தப்படுகிறது. அதனடிப்படையில் சிறு குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்களை பெறவும், தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்யும் பிற நபர்களை சார்ந்திராமல் விவசாயிகள் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் அவர்களுக்கான ஒரு நிறுவனத்தை உருவாக்கி விவசாயிகள் பயனடையும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரையில் ஒன்பது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அரசின் நிதி உதவியுடன் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலமாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மலை காய்கறிகளான காபி, குருமிளகு, தேயிலை ஆகியவற்றை கொள்முதல் மற்றும் விற்பனை போன்ற வணிகங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசின் மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்குவதற்கான நிதி உதவிகள் ெதாடக்க நிதியுதவி, உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் உறுப்பினர்களின் பங்கு தொகைக்கு ஏற்ற சமபங்கு மூலதனம் போன்ற நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு தொழில் நுட்ப பயிற்சிகளும், விவசாய விளை பொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கான பயிற்சிகளும் அதன் பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் சார்பில் மலநாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் கூடலூர், மாங்கோடு பகுதியில் உள்ள விவசாயிகள் காபி, தேயிலை, குருமிளகு, நெல், இஞ்சி, பாக்கு போன்ற பயிர்களை சாகுபடி செய்ததை விற்பனை செய்து வருகிறது. பந்தலூர் பகுதியில் உள்ள விவசாயிகளை இணைத்து தற்போது உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் 313 விவசாயிகளுக்கு இந்நிறுவனத்திற்கு இதுவரை ரூ.14.55 லட்சம் நிறுவன மேம்பாட்டிற்கும், சமபங்கு மூலதனமாக ரூ.6.25 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

மலநாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலமாக நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் இதர விவசாயிகள் விளைவிக்கும் காபி, குருமிளகு, நெல், பாக்கு, இஞ்சி போன்றவற்றை நேரடியாக கொள்முதல் செய்து அண்டை மாநிலங்களுக்கு மொத்தமாக இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதி விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிட்டுகிறது. சென்ற வருடத்தில் மட்டும் சுமார் 5.75 கோடி வர்த்தகம் நிறுவனத்தின் மூலம் நடைபெற்றுள்ளது. மேலும் நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் மூலம் 2024-25ம் வருடத்தில் ரூ.75 லட்சத்தில் காபி, குருமிளகு பதப்படுத்தும் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேயிலை வாரியம் மூலமாகவும், பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.