Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லியில் ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள் சந்திப்பு

டெல்லி: தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளும் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தனர். இலங்கை கடற்படை தாக்குதல், மீனவர்கள் சிறைப்பிடிப்பு, உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்தார். தமிழ்நாடு எம்.பி.க்கள் ஜோதிமணி, விஜய் வசந்த் மற்றும் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், அவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடிக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பல்வேறு தரப்பினரும் கனிமொழி எம்.பி., தலைமையில் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இன்றைய தினம் காலையில் சுமார் 10.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகம் அருகே கங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், மீனவ அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். இதனையடுத்து சுமார் 4 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவரும் மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு சட்டப்பேரவையின் காங்கிரஸ் குழுத்தலைவராக இருக்க கூடிய ராஜேஸ்குமார், தமிழ்நாடு எம்.பி.க்கள் ஜோதிமணி, விஜய் வசந்த் மற்றும் மீனவப்பிரதிந்திகளும் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர்.