Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலைஞர் குறித்து அவதூறு பேச்சு வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சீமான் மீது நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர் புகார்

சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற வழக்கறிஞர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எழும்பூர் பகுதியை சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜன் (50), நேற்று முன்தினம் இரவு அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தனியார் தொலைக்காட்சிகளில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்ததற்கு எதிராக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், முன்னாள் முதல்வர் கலைஞரை மிகவும் அவதூறாக பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும், சீமான் தன்னுடைய திரைப்படமான ‘தம்பி’ என்ற படத்தில் ஒரு வசனமாக குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சாதியின் பெயரை சொல்லி பேசியதற்கு பங்கிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார். இருந்த போதிலும், அந்த வார்த்தை ஒதுக்கப்பட்ட பட்டினலினத்தை சேர்ந்த ஒரு சாதியை சேர்ந்த மக்களை குறிப்பிட்டு மற்றவர்களை இழிவுப்படுத்தும் நிலையில் அதை தெரிந்து இதுபோன்று ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களை தொடர்ந்து இழிவாகவே பேசி வருகிறார். கலைஞரை ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட பட்டியலின சாதியை சாந்த மக்களை குறிப்பிட்டு மீண்டும் பேசியுள்ளார். எனவே, கலைஞரை களங்கம் விளைவிக்கும் வகையில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்பு மற்றும் அவதூறு பேசியதற்கு எதிரான சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.