லக்னோ: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மக்களவை தேர்தலுக்கு முன் கடந்த 2022 இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டார். அப்போது, ‘‘அருணாச்சல் எல்லையில், இந்திய ராணுவ வீரர்கள் சீன ராணுவ வீரர்களால் தாக்கப்பட்டது குறித்து யாரும் கேள்வி கேட்கவே மாட்டார்கள்” என சொன்னதாக புகார் எழுந்தது. இந்திய ராணுவ வீரர்கள் பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது எல்லை சாலைகள் அமைப்பின் ஓய்வு பெற்ற இயக்குநர் உதய் சங்கர் வத்சவா என்பவர் லக்னோ உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தி நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது ராகுல் காந்திக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Advertisement