கடலூர்: கடலூரில் பெண் காவல் உதவி ஆய்வாளர் சரண்யாவை தாக்கிய தலைமை காவலர் பாலமுருகன் கைது செய்யப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் உதவி ஆய்வாளர் சரண்யாவுக்கு தலைமை காவலர் பாலமுருகன் கடன் கொடுத்துள்ளார். பணத்தை திருப்பிக்கேட்க போன் செய்தபோது தலைமை காவலரின் எண்ணை எஸ்ஐ சரண்யா பிளாக் செய்துள்ளார். வீட்டின் முன் நின்றிருந்த எஸ்.ஐ.சரண்யாவை ஆபாசமாக திட்டி தலைமை காவலர் பாலமுருகன் தாக்கினார். உதவி ஆய்வாளர் சரண்யா புகாரை அடுத்து தலைமை காவலர் பாலமுருகன் கைது செய்யப்பட்டார்.
Advertisement


