Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூர் ரயில் விபத்து.. Inter Locking System என்றால் என்ன?: ரயில்வே தொழிற்சங்க தலைவர் இளங்கோவன் விளக்கம்!!

கடலூர்: இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்றால் ரயில்வே கேட் மூடினால்தான் சிக்னலே வரும் என்று ரயில்வே தொழிற்சங்க தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில், 3 மாணவர்கள் பலியாகினர். மேலும், படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து ரயில்வே தொழிற்சங்க தலைவர் இளங்கோவன் மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் அளித்த பேட்டியில்;

ரயில்வே தொழிற்சங்க தலைவர் இளங்கோவன்:

இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்றால் ரயில்வே கேட் மூடினால்தான் சிக்னலே வரும். நாடு முழுவதும் ரயில்வே வழித்தடங்களில் Inter Locking System முறையை கொண்டுவர வேண்டும். செம்மங்குப்பத்தில் Inter Locking System இல்லாததால் ரயில்வே கேட் திறந்திருந்தும் ரயில் சென்றுள்ளது என்றார்.

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன்:

ரயில்வே கேட்டை திறக்க சொல்லி கேட் கீப்பரை வலியுறுத்தியுள்ளனர் . செம்மங்குப்பம் ரயில்வே வழித்தடம் Non Inter Locking System ஆகும். மூடிய ரயில்வே கேட்டை திறந்ததால்தான் விபத்து நடந்துள்ளது. வேன் மீது மோதிய ரயில் 95 கி.மீ. வேகத்தில் வந்து கொண்டிருந்தது. விபத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட வழித்தடத்தில் செல்லக்கூடிய 5 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Inter Locking System என்றால் என்ன?:

ரயில் விபத்துகளில் இன்டர்லாக்கிங் அமைப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இன்டர்லாக்கிங் என்பது ரயில் பாதைகள், சிக்னல்கள் மற்றும் புள்ளிகளை ஒன்றோடொன்று இணைக்கும் ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். இது ரயில்கள் மோதிக் கொள்வதைத் தடுக்கவும், பாதைகள் மற்றும் சிக்னல்கள் சரியான முறையில் இருப்பதை உறுதி செய்யவும் பயன்படுகிறது.