கடலூரில் கோஷ்டி பூசல் காரணமாக ஒரே இடத்தில் இரு தரப்பினர் நீர் மோர் பந்தல் திறப்பதற்கு ஏற்பாடு; அனுமதி மறுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்
கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியில் முன்னாள் அமைச்சர் சம்பத் மாநில எம் ஜி ஆர் மன்ற நிர்வாகி கார்த்திகேயன் கோஷ்டி பூசல் காரணமாக ஒரே இடத்தில் இரு தரப்பினர் நீர் மோர் பந்தல் திறப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில் இரு தரப்பு மோதல் உருவாகும் சூழலை தொடர்ந்து போலீசார் அனுமதி மறுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.