புதுடெல்லி: ஜார்க்கண்டின் சிங்பூம் மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின்போது வடக்கு சாரண்டா காடுகளில் வீரர்கள் தீவிர தேடுதல் மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடந்த குண்டு வெடிப்பில் சிஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் கவுஷல் குமார் மிஸ்ரா உட்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட மிஸ்ரா விமானம் மூலமாக அழைத்து வரப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அசாமை சேர்ந்த காவலர் லஸ்கர் கடந்த 11ம் தேதி உயிரிழந்தார். எய்ம்சில் மிஸ்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
+
Advertisement


