சென்னை : உரிய சான்றிதழ்கள் இல்லாமல், சந்தேகத்துக்கு இடமான வகையில் அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்லப்படுவதைக் கண்டறிந்தால், சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிகள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக விலங்குகள் நல வாரியம் தரப்பில் எவரும் ஆஜராகாவிட்டால், வாரிய செயலாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement