Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூட்டுறவின் சேவைகளை மாநகரப் பேருந்துகளில் விளம்பரப் படுத்துதல் தொடர்பாக கேஆர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல்வர் அண்ணன் தளபதி அவர்கள் பொறுப்பேற்று 4 ஆண்டுகளில் அனைத்து துறைகளும் மகத்தான சாதனைகளை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி செய்து 4 ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக எல்லோர்க்கும் எல்லாம் என்கின்ற தத்துவத்தை நிலைநிறுத்துகின்ற வகையில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளும், அனைத்து திறப்பு மக்களும், அனைத்து துறைகளும், சீரான வளர்ச்சியை முன்னேற்றத்தை முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சாதித்து இருக்கிறார்.

இன்று அனைத்து மக்களும் அரசியல் அப்பாற்பட்டவர்களும், பொதுமக்கள் விரும்புகின்ற இந்த 4 ஆண்டு ஆட்சி மட்டும் அல்ல இனிவரும் காலங்களிலும் இவர் தலைமையிலான இந்த ‘’நல்லரசு’’ தொடரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்ற சூழ்நிலையே இன்றைக்கு உள்ளது.

பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் வளர்ச்சி ஒட்டுமொத்த மாநிலங்களின் வளர்ச்சியை உயர்த்தி இருக்கின்ற கூட்டுறவுத்துறை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி சிறப்பான பல சாதனைகளை செய்துவருகின்றது என்றால் அது மிகையாகாது.

இத்துறையானது ‘’யானை பலம் கொண்ட ஒரு துறை’’ என அனைவரும் அறிந்த ஒன்றுதான். நீண்ட வரலாறு கொண்ட ஒரு அமைப்புதான் இந்த கூட்டுறவு.

கூட்டுறவே நாட்டுயர்வு என்ற அந்த பொன்மொழியும் இன்று மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 120 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இந்தியாவில் வேறு எங்கும் கூட்டுறவு சங்கங்கள் உருவாவதற்கு முன்னரே தமிழ்நாட்டில் தான் தற்போது இந்தியாவில் முதல் கூட்டுறவு சங்கம் 1904-ல் திருவள்ளூவர் மாவட்டத்தில் “திரூர்” என்ற கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் கூட்டுறவுத்துறை, தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது பெருமைக்குரியதாகும்.

கிராமபுற மக்கள் தொடங்கி நகர்புற மக்கள் வரையிலும், நேரடியாக சந்திக்கின்ற ஒரு துறை என்றால் அது கூட்டுறவுத்துறையே. தமிழகத்தில் இரண்டு கோடியே இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. இந்த குடும்பங்களை நேரடியாக தொடர்பு கொள்கின்ற ஒரு துறை என்றால் அது கூட்டுறவுத்துறை ஆகும்.

அரசு அறிவிக்கின்ற எந்த திட்டமாக இருந்தாலும் பண்டிகை காலங்களில் முதலமைச்சர் அவர்கள் வழங்குகின்ற பொங்கல் தொகுப்பு, இயற்கை சீற்றங்களின் காலத்தில் பொதுமக்களுக்கு அரசு வழங்குகின்ற உதவிகள் எல்லாவற்றையும் கொண்டு இல்லம் தேடி கொண்டு சேர்க்கும் ஒருதுறை கூட்டுறவுத்துறை. அதுபோல் பொருளாதார வளர்சிக்கு தேவையான, அனைத்து மக்களுக்கும் தேவையான கடன்களை செய்வதே இந்ததுறையின் முன்னோடியாக இருக்கிறது.

வங்கி சேவையிலும் மகத்தான சாதனைகளை இத்துறை படைத்திருக்கிறது. குறிப்பாக விவசாயிகளுக்கான கடன்களை வழங்கி, சிறு தொழில் செய்பவர்கள், மகளிர் சுயஉதவி குழுக்களை சார்ந்தவர்கள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள், என்று 34 வகையான பிரிவினருக்கு கூட்டுறவு துறையின் கூட்டுறவு நாணய சங்கங்கள் மூலமாக கடன்கள் வழங்கப்பட்டு, அவர்களுடைய பொருளாதார வளர்சிக்கும், அடித்தட்டு மக்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்துவதற்கும், கூட்டுறவு சங்கம் பயன்பட்டு வருகிறது.

பொதுமக்கள் பயன்படுத்துகின்ற அத்தியாவசிய பொருட்கள் வெளி சந்தையை விட ‘’மலிவான விலையில் தரமான பொருட்கள்’’ கூட்டுறவு சங்கங்களின் பண்டகசாலைகல் மூலமாக பொதுமக்களுக்கு இத்துறையின் மூலமாக கொண்டுபோய் சேர்க்கப்படுகிறது. மக்களோடு இனைந்து அன்றாட வாழ்க்கைக்கு, மக்களுக்கு தேவையான காரியங்களை செய்கின்ற துறைதான் கூட்டுறவுத்துறை.

முதலமைச்சர் அவர்கள் முத்தாய்பாக இந்த துறைக்கு ஒரு வாய்பினை தந்தார்கள். அதுதான் ‘’முதல்வர் மருந்தகம்’’. 1000 முதல்வர் மருந்தகங்களை தமிழகம் முலுவதும் தொடங்குவதற்கு வாய்ப்பினை தந்து, அதில் 500 முதல்வர் மருந்தகங்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலமாகவும் அதே போல் 500 மருந்தகங்கள் புதிய தொழில்முனைவோருக்கு வாய்பளிக்கின்ற வகையிலும் வழங்கப்பட்டது. அப்படி தொடங்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள் இயற்கை உரம், ரசாயன உரம், போன்றவற்றையும் விவசாயிகளுக்கு கொண்டுபோய் சேர்கின்றது. கூட்டுறவுத்துறையின் மூலமாக பொது மக்களுக்கு வழங்கக்கூடிய சேவைகள் பொது மக்களுக்கு இன்னும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற உணர்வோடு இதனுடைய செயல்பாடுகளை விளம்பரப்படுத்துகின்ற வகையில் தற்போது அரசு நகரப் பேருந்துகளில் விளம்பரப்படுத்துவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்ககளுடைய கூட்டுறவு செயல்பாடுகளை எல்லாம் பொதுமக்கள் அறிந்து கொள்கின்ற வகையில் எதிர்காலத்தில் இவ்வளவு சேவைகள் இந்த துறையில் இருக்கின்றதா? என்பதனை பொதுமக்கள் அறிந்து கொள்கின்ற வகையில் பேருந்துகளில் விளம்பரபடுத்துவதற்கான 300 பேருந்துகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முதற்கட்டமாக இன்று (04.06.2025) 10 பேருந்துகள் விளம்பர பதாதைகளோடு நகரில் வலம் வர தயாராக உள்ளது.

நீண்ட நெடிய வலுவான கட்டமைப்புகளை கொண்ட கூட்டுறவு சங்கங்களுக்கு இந்த பேருந்துகளில் செய்யப்படுகின்ற விளம்பரங்கள் பொது மக்களுக்கு சென்றடைந்து, இன்னும் கூடுதலான சேவைகளை செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்து.

கேள்வி

ஒரு பேருந்துக்கு எவ்வளவு தொகை செலவு செய்யப்படுகின்றது?

அமைச்சரின் பதில்

மாதம் ஒரு பேருந்திற்கு 12 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கேள்வி

வங்கிகளில் தங்க நகைக்கடன் வைப்பதற்கு ரிசர்வ் வங்கிகள் பல்வேறு விதிமுறைகள் வைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இதற்கு ஏதேனும் கிளைகள் ஏற்படுத்தப்படுமா?

அமைச்சரின் பதில்

ஒன்றிய அரசு அறிவித்தார்கள் அது வரைவு அறிக்கைதான். அந்த வரைவு அறிக்கைக்கு நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெளிவாக நிதி அமைச்சர்க்கு கடிதம் எழுதினார்கள். இது வெகுவாக நடுத்தர மக்களை, ஏழை எளிய மக்களைபாதிக்ககூடிய நடவடிக்கையாக இருக்கிறது. ஆகவே இதனை திரும்ப பெற வேண்டும் என்று நானும் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போது சொல்லியிருந்தேன். வரைவுகளில் கூட சில தளர்வுகளை கொண்டு வந்தார்கள் தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அதனை திரும்ப பெறுவதற்கு வழிவுறுத்தி கொண்டு இருக்கின்றார்கள்.

கேள்வி

வீடு தேடி பொருட்கள் (Home delivery) எவ்வாறு செயல்படும்?

அமைச்சரின் பதில்

படிப்படியாக தேவைகளுக்கு ஏற்றாற்போல் நடந்துகொண்டு வருகின்றது.

கேள்வி

விளம்பர பேருந்துகள் செயல்படுத்தப்படுவது தமிழகம் முழுவதுமா? சென்னை மட்டுமா?

* அமைச்சரின் பதில்

முதற்கட்டமாக இப்பொழுது சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது, 1000 ஆட்டோக்களுக்கு கடன் உதவி செய்ய உள்ளோம். மகளிருக்கும் உதவிகள் செய்ய உள்ளோம், அந்த ஆட்டோக்களில் இன்னும் பல்வேறு வகையில் பேருந்து நிழற்கூடைகளில் கூட்டுறவு சங்கங்களின் சார்பாக நியமிப்பதற்கு பல்வேறு வகையில் விளம்பரங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் விரைவில் அதை செயல்படுத்துவோம் என கூறினார்.