Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2026 சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றத்தில் போட்டியா?: விஜயகாந்த் மகன் பேட்டி

அவனியாபுரம்: 2026 சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றத்தில் போட்டியா? என்ற கேள்விக்கு விஜயகாந்த் மகன் பதிலளித்து உள்ளார். மதுரை அவனியாபுரம் அருகே அயன் பாப்பாக்குடி அரசு பள்ளிக்கு, நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகர் விஜய் மிகப்பெரிய சினிமா நட்சத்திரம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அரசியல் என்று பார்க்கும்போது, தேமுதிக 20 ஆண்டுகள் பழமையான கட்சி. அவரது அரசியல் கொள்கை மற்றும் மக்கள் வரவேற்பு உள்ளிட்டவற்றை வைத்து மட்டுமே, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூற முடியும். அவர் இன்னும் கட்சியை முழுமையாக துவக்கவில்லை. மாநாடு நடத்தவில்லை. அவையெல்லாம் நடந்த பிறகு பேசுவோம். எங்களுடன் கூட்டணி வைப்பதற்காக அவர் கட்சி தொடங்கவில்லை. கட்சி தொடங்கும் பணிகள் முழுமை அடைந்த பிறகு.

எந்த கூட்டணிக்கு செல்கிறார் என்பது தெரியும். பல தடைகள் மற்றும் அவமானங்களை கடந்து தான் இன்று தேமுதிக கொடி பறக்கிறது. எங்களுக்கு எத்தனையோ பிரச்னைகள் வந்தன. இதையெல்லாம் தாண்டி வருவதுதான் அரசியல். இது விஜய்க்கும் தெரியும்.இவ்வாறு கூறினார். 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து கேட்டபோது, ‘‘இப்போது 2024 தான் நடக்கிறது. 2026 வரும்போது அதுகுறித்து பேசலாம். திருப்பரங்குன்றம் தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்தும் அப்போது முடிவு செய்யலாம். முன்னதாகவே பேசி தொகுதியின் தற்போதைய அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவுக்கும் எனக்கும் பிரச்னையை உருவாக்காதீர்கள்’’ என்றார்.