திருவொற்றியூர்: சாலையில் தடுப்புச்சுவரில் கன்டெய்னர் லாரி மோதியதில் டிரைவர் காயத்துடன் தப்பினார். சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் பூவரசன் (28). இவர் இன்று அதிகாலை கன்டெய்னர் லாரியை மணலி புதுநகரில் உள்ள சரக்கு பெட்டகத்துக்கு ஓட்டிச்சென்றார். எண்ணூர் விரைவு சாலையில் உள்ள எல்லையம்மன் கோவில் தெருவில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி அங்குள்ள சென்டர் மீடியன் மீது மோதியது. இந்த விபத்தில் அங்குள்ள சிக்னல் கம்பம் முறிந்துவிழுந்தது. டிரைவர் பூவரசன் லேசான காயங்களுடன் தப்பினார்.
இந்த விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போக்குவரத்து போலீசார் சென்று பூவரசனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கன்டெய்னர் லாரியை மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். தூக்கக் கலக்கத்தில் விபத்து நடந்துள்ளதா என்று போலீசார் விசாரிக்கின்றனர்.


