புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் கார்கேவின் வீட்டில் நாளை இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெறும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இதேபோல் மும்பையில் பேசிய சிவ சேனா எம்பி சஞ்சய் ராவத், இந்தியா கூட்டணியின் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. கே.சி.வேணுகோபாலிடம் இருந்து இது குறித்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ஜூலை 19ம் தேதி கூட்டம் நடைபெறும் என்றார்.
Advertisement