Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக பாஜ தலைவரை கண்டித்து; நங்கநல்லூரில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆலந்தூர்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை அவதூறாக பேசிய தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை கண்டித்து, நேற்று மாலை நங்கநல்லூரில் தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையை ஒரு நிகழ்ச்சியில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசியதை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், நேற்று மாலை நங்கநல்லூர், மார்க்கெட் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி.அய்யம்பெருமாள் தலைமை தாங்கினார்.

ஆலந்தூர் பகுதி தலைவர்கள் ஆதம் பி.ரமேஷ், ஏ.வி.தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜ், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை கண்டித்து கோஷம் எழுப்பி துவக்கிவைத்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் கோகுலகிருஷ்ணன், பி.எஸ்.ராஜ், எம்.பி.நேரு ரோஜா, மோகனகிருஷ்ணன், எஸ்.வடிவேல், கோ.சந்தானம், முன்னாள் கவுன்சிலர் ஜெ.நாகராஜன், டி.கஜபதி, ஆவின் ஆனந்த், பொன் சிவசெல்வம், குருபாரதி, பாரதி, ஜெயவேல், பாரி, சாலமன், கிருஷ்ணன், சிவமுருகன், பார்த்திபன், லோகேஷ், மகேஷ், திருநாவுக்கரசு உள்பட பலர் பங்கேற்று, தமிழக பாஜ தலைவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.