சென்னை: தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று மாலை மதுரையில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: கடலூர் ரயில் விபத்தில் குழந்தைகள் பலியானது வருந்தத்தக்க சம்பவம்.
குழந்தைகளை இழந்து தவிக்கும், பெற்றோருக்கு, ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் எப்படி இருக்கிறது என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது குறித்த அறிவிப்பு, கூடிய விரைவில் வரும். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கின்றன. நீண்ட தூரம் நடக்க வேண்டியது இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


