கோவை: கோவை பீளமேடு மருத்துவமனை கழிவறையில் மாணவி இறந்த விவகாரம் தொடர்பாக 5 நாட்களில் விசாரித்து அறிக்கை தர கோவை மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவி பவபூரணி கழிவறையில் இறந்த நிலையில் மீட்க்கப்பட்டார். மாணவி பவபூரணி இறந்தது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.
Advertisement


