திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி ஆலத்தம்பாடி கிராமத்தில் இந்தாண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 150 பண்ணை குடும்பங்களுக்கு வீடு தோறும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டு நடவு செய்யப்பட்ட பகுதியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வு குறித்து கூறுகையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 5 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன இதில் தேர்வு செய்யப்பட்ட கிராமமான ஆலத்தம்பாடி கிராம பஞ்சாயத்தில் 300 தென்னங்கன்றுகள் 150 பண்ணை குடும்பங்களுக்கு சென்ற வாரம் வழங்கப்பட்டது.
அவ்வாறு வழங்கப்பட்ட தென்னங்கன்றுகளின் தற்போதைய நிலை மற்றும் நடவு செய்யப்பட்ட முறை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த தொகுப்பு தளையில் ஒரு மா ஒட்டுச்செடி, ஒரு கொய்யா பதியன், ஒரு நெல்லி ஒட்டுச் செடி, ஒரு எலுமிச்சை மற்றும் ஒரு சீதா செடி ஆகியவை அடங்கும். இந்த பழச் செடி தொகுப்பு தளை அதிகபட்சம் ஒரு நபருக்கு இரண்டு எண்கள் வரை வழங்கப்பட உள்ளதால்.
மேற்கண்ட கிராம த்தைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இல்லத்தரசிகள் சம்பந்தப்பட்ட உதவி தோட்டக்கலை அலுவலர்களை நேரடியாகவோ அல்லது உழவர் சந்தை அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் திருத்துறைப்பூண்டி தொடர்பு கொண்டும் முன்பதிவு செய்து பயன்பரலாம் என்றார். ஆய்வின்போது உதவி தோட்டக்கலை அலுவலர் கார்த்திகேஷன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ஸ்ரீதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


