Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பள்ளிகளில் நடைபெறும் கோச்சிங் சென்டர்களை தடைசெய்யவோ அல்லது வரையறுக்கவோ குழு ஒன்றை அமைக்க வேண்டும்: மாநில கல்விக் கொள்கை குழு பரிந்துரை

சென்னை: பள்ளிகளில் பயிற்ச்சி மையங்கள் அமைக்க தடை விதிக்கவோ அல்லது வரையறை செய்யவோ ஒரு குழு அமைக்க வேண்டும் என மாநில கல்விக் கொள்கை வரையறை குழு பரிந்துரை செய்துள்ளது. நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதிலேயே கோச்சிங் செண்டர்கள் கவனம் செலுத்துவதாகவும் புகார் செய்துள்ளனர். பாடத் திட்டத்தை முழுமையாக முடிக்காமலேயே மாணவர்களை தயார்படுத்துகின்றனர். மாணவர்கள் ஆழ்ந்து படிக்கும் நிலை இல்லாமல் போவதாக புகார் வந்துள்ளதால் இந்த பரிந்துரையானது செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலத்திற்கென்று சிறப்பாக வரலாற்று மரபு, மாநிலத்தின் எதிர்கால கல்வி ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஏற்ற மாநில கல்வி கொள்கையை வரையறை செய்ய கடந்த 2021-ம் ஆண்டு மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, டெல்லி உயர்நீதிமன்ற முன்னால் நீதிபதி முருகேசன் தலைமையில் மாநில கல்விக்கொள்கை வரையறை குழு அமைக்கப்பட்டு 2 ஆண்டுகள் முழுமையாக மாணவர்கள், பெற்றோர் என அனைத்து தரப்பில் இருந்தும் கருத்துகளை பெற்று கடந்த ஆண்டு முதலமைச்சரிடம் அறிக்கை சமர்பித்தனர்.

கல்வியை மாநிலபட்டியலுக்கு கொண்டுவரவேண்டும், 10-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு கூடாது, அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்று பல்வேறு பரிந்துரைகள் மாநில கல்விக்கொள்கையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக பள்ளிகள் அளவில் செயல்படும் கோச்சிங் செண்டர்களுக்கு தடை விதிக்க குழு பரிந்துரை செய்துள்ளது. குறிப்பாக பள்ளிகளிலோ, அல்லது பள்ளிகளுடன் இணைந்து செயல்படுத்தப்படுத்தப்பட கூடிய கோச்சிங் செண்டர்களுக்கு விதிக்கப்படகூடிய தடை என்பது முக்கியமானதாக இருக்கும் என குழு கூறியுள்ளது.

காரணம்:

பள்ளிகளில் மாணவர்களை முழுமையாக முழுமையாக பாடத்திட்டத்தை படிக்க விடாமல் அடுத்தக்கட்டமாக நுழைவுத்தேர்வுக்கு தயார்படுத்துவதிலேயே இந்த பள்ளிகளில் நடத்தப்படகூடிய கோச்சிங் செண்டர்கள் முழுமையாக ஈடுபடுத்தப்படுவதாகவும், இதனால் மாணவர்கள் பாடத்திட்டத்தை ஆழ்ந்து படிக்க கூடிய நிலை என்பது இல்லாமல் போவதாகவும் பல்வேறு தரப்பில் இருந்து பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்ததாக கல்விக்கொள்கை வரையறை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில், பள்ளிகள் அளவில், பள்ளிகளுடன் இணைந்து, பள்ளிகளுக்குள் செயல்படும் கோச்சிங் செண்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும். அல்லது இவற்றை முழுமையாக வரையறை செய்ய ஒரு குழு அமைக்கப்படவேண்டும். அதன்படி அந்த கோச்சிங் செண்டர்கள் எப்படி நடத்தப்படவேண்டும் என்பதை அந்த வரையறை குழு நிர்ணயம் செய்ய வேண்டும் என பரிந்துறை கொடுக்கப்பட்டுள்ளது.