Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளூர், ஊத்துக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் முகாம்: எம்எல்ஏக்கள் மனுக்களை பெற்றனர்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காவனூரில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டாட்சியர் செ.வாசுதேவன், ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றிய திமுக செயலாளர் சே.பிரேம் ஆனந்த், ஒன்றிய குழு துணைத் தலைவர் பர்க்கதுல்லாகான், பொதுக்குழு உறுப்பினர் ஜி.விமல்வர்ஷன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வ.ஊ.) எம்.ஜி.குணசேகரன், (கி.ஊ.) கே.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமிற்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். இதில் மண்டல துணை வட்டாட்சியர் சந்திரசேகர் வருவாய் ஆய்வாளர்கள் மகேஷ, பொன்மலர், திமுக ஒன்றிய துணை செயலாளர்கள் ஞா.ரமேஷ், மு.ராஜா, மகேஸ்வரி பாலவிநாயகம், ஒன்றிய கவுன்சிலர்கள் வ.அரி, சங்கீதா ராஜி, கு.கருணாகரன், ஆர்.ராஜி, பி.ராமானுஜம், சீனிவாசன், மோகன், பார்த்திபன், அருணகிரி, கார்த்திக், ஏழுமலை, சிவன்வாயில் மோகன், அன்பு, நாகராஜ், மணிவண்ணன் திருமலை, ராஜசேகர், சரவணன், அஜீத் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொதுமக்களின் இந்த கோரிக்கைகள் மீதான விசாரணை மேற்கொண்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தெரிவித்தார். ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் ஊத்துக்கோட்டை தாசில்தார் சதீஷ் தலைமை தாங்கினார். திமுக எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு, மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம், கண்ணபிரான், நீதி செல்வசேகரன், கார்த்தி, சுரேஷ், பிடிஒ ராமகிருஷ்ணன், டாக்டர் சங்கீதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரி உதயகுமார், துணைத்தலைவர் மேனகா, ஊராட்சி செயலாளர் பொன்னரசு ஆகியோர் வரவேற்றனர். இதில், சிறப்பு அழைப்பாளராக கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டார். மேலும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் மருத்துவ கிட்டு மற்றும் 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை, காப்பீடு திட்ட அடையாள அட்டை ஆகியவை வழங்கினார்.இந்த முகாமில் அக்கரப்பாக்கம், ஆலப்பாக்கம், அமிதாநல்லூர், அத்திவாக்கம், கன்னிகைப்பேர், மதுரவாசல், மஞ்சங்காரணி, நெய்வேலி, பனப்பாக்கம், பனையஞ்சேரி, திருநிலை ஆகிய 11 ஊராட்சிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுக்க குவிந்தனர். இந்த முகாமில் வருவாய்த்துறை, காவல் துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூகநலத்துறை, ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தொழிலாளர் நலவாரியம் (சமூகபாதுகாப்புத்திட்டம்) தாட்கோ, வேலைவாய்ப்புத்துறை, மாவட்ட தொழில் மையம், மற்றும் மகளிர் திட்டம் ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.