Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இணைந்தார்: தவெகவில் விஜய் அப்பாவையே ஏற்றுக்கொள்ளவில்லை என பரபரப்பு பேட்டி

சென்னை: நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல அரசு பள்ளி கூடங்களுக்கு வகுப்பறைகள் மற்றும் கலை அரங்கங்களை தன் சொந்த செலவில் கட்டிக் கொடுத்த கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

அப்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ரெ.மகேஷ், ஆலங்குளம் முன்னாள் எம்எல்ஏ வழக்கறிஞர் பால் மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

பிறகு பி.டி.செல்வகுமார் அளித்த பேட்டி:

தமிழ்நாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். திமுகவின் கட்டமைப்பு என்னை சிறப்பாக ஈர்த்தமையால், அந்த நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் போது, இன்னும் சிறப்பாக மக்களுக்கு அதிக நன்மைகள் செய்ய முடியும். அதற்கு அதிகாரமும், நல்ல அரசும் தேவை என்பதால் திமுகவில் இணைந்துள்ளேன். விஜய் மக்கள் இயக்கத்துக்கு நான் ஒரு மிகப்பெரிய பில்லராக இருந்து பணியாற்றவன் என்பது அவர்களுக்கு தெரியும். காலப்போக்கில் புதுசு, புதுசாக உள்ளே வருகிறார்கள். புதிது புதிதாக வருபவர்கள் முன்னிலையில் எங்களை மாதிரி, அவங்க அப்பாவையை (எஸ்.ஏ.சந்திரசேகர்) உள்ளே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், எங்களை மாதிரி உள்ளவர்கள் அங்கே பயணம் செய்ய முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

விஜய்யிடம் நல்ல கூட்டம் ஒன்று இருக்கிறது. தீய கூட்டம் ஒன்று இருக்கிறது. விஜய்யை சுற்றி இருக்கும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் முதல் கடைசியில் சேர்ந்த நாஞ்சில் சம்பத் வரை எல்லாரும் பெரிய தியாகிகள் கிடையாது. விஜய் முதலில் என்ன சொன்னார். ரசிகர் மன்றத்துக்காக உழைத்தவர்களுக்கு, எனக்கு போஸ்டர் ஓட்டினவர்களுக்கு, பால் ஊற்றியவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன் என்று சொன்னார். இன்னைக்கு அதில் இருக்கும் 7 பேர் ஏதாவது ரசிகர் மன்றத்தில் இருந்தார்களா?. அது செங்கோட்டையனாக இருக்கட்டும், நிர்மல் குமாராக இருக்கட்டும். யாருமே இல்ைல. விஜய்க்காக ஆரம்ப காலத்தில் உழைத்தவர்கள், தியாகம் செய்தவர்கள் யாரும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.