Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களுடன் முதல்வர்

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசின் வேகங்களுக்கு தடை போடும் விதமாக தமிழ்நாட்டுக்கான நிதியை தராமல் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால் எதற்கும் அசராமல் புதிய புதிய திட்டங்கள் மூலம் சிறப்பான ஆட்சியை மு.க.ஸ்டாலின்நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு அரசு துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஊடகங்கள் மூலமாக பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும், செய்தி தொடர்பாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இந்த திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாகும். காரணம் இத்திட்டத்தின் மூலம் நீண்ட காலமாக விவசாயிகள் மற்றும் புதிய வீடுகள் வாங்கியவர்கள் பட்டா மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம் போன்ற பல மக்களின் பிரச்னைகளை நேரடியாக வீடு தேடி சென்று அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்கின்றனர்.

இவ்வாறாக மக்களுக்கான அரசாக நடத்தி வருகிறார். தமிழகத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் எதற்காக, எப்படி, ஏன் நடத்தப்படுகிறது என்பது குறித்த முழு விவரங்களை தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசின் செயல்பாடுகள் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் வரும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

தகுதியானவர்கள் விடுபட்டு இருந்தால் விண்ணப்பங்களை பெற்று நிரப்பி கொடுக்க, உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டு திட்டத்தில் இணைக்கப்படுவர். மக்கள் அதிகமாக கூடுகிற, வசிக்கிற இடங்களில் முகாம்கள் நடத்தப்படுகிறது. மக்களுக்கு நாம் முகாம் நடத்துவது தெரியப்படுத்த, முகாம் நடத்துவதற்கு முன்பாக தன்னார்வலர்களை அனுப்பி சிறப்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது. இதற்காக ஒரு லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நவம்பர் வரை 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முன்பு 20,000 மக்கள் தொகைக்கு ஒரு முகாம் இருந்தது. இப்போது 10,000 மக்கள் தொகைக்கு ஒரு முகாம் அமைக்கப்பட உள்ளது.

முகாம்கள் நடக்கும் ஒரு வாரத்துக்கு முன்பு வீடு, வீடாக சென்று மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். வாரத்தில் 4 நாட்கள் முகாம் நடைபெறும். இது நவம்பர் மாதம் வரை நடைபெறவிருக்கிறது. மக்களின் குறைகளை கேட்டறிய, 1100 என்ற எண்ணுடன் 100 பேர் கொண்ட உதவி மையம் செல்பட்டு வருகிறது. அரசின் சேவைகளை பெற மக்கள் சிரமப்படுவதை அறிந்து மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் சேவைகளை பெற மக்கள் சிரமப்படுவதை அறிந்து, மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் மக்களிடையே விரைவாக செல்ல கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்களின் புகார் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் முகவரி துறை மூலம் 1.5 கோடி மனுக்கள் பெறப்பட்டன. கடந்த 30ம் தேதி வரை 1 கோடி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 2,344 ஊரக முகாம்கள் மூலம் 95 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளதை மக்களுடன் முதல்வர் என்பதற்கு சான்றாக எடுத்து கொள்ள வேண்டும்.