Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சித்தூர் கட்டமஞ்சி பகுதியில் சாலையை ஆக்கிரமித்த கட்டிடங்கள் அகற்றம்

*திட்டத்துறை அதிகாரிகள் அதிரடி

சித்தூர் : சித்தூர் மாநகராட்சி பகுதியில் சாலையை ஆக்கிரமித்த கட்டிடங்களை ஜேசிபி மூலம் இடித்து அகற்றும் பணியில் திட்டத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஈடுபட்டனர்.

சித்தூர் மாநகராட்சி திட்டத்துறை அதிகாரிகள் தலைமையில் சித்தூர் கட்டமஞ்சி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய கட்டிடங்களை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அதிரடியாக இடித்து அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இதுகுறித்து மாநகராட்சி திட்டத்துறை அதிகாரி நாகேந்திரா கூறியதாவது:

சித்தூர் மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த மாநகராட்சி கூட்டத்தொடரில் சித்தூர் மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலைகளை இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்த வேண்டுமென ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி கலெக்டர் மற்றும் சித்தூர் எம்எல்ஏ குரஜால ஜெகன்மோகன், மாநகராட்சி ஆணையர் நரசிம்ம பிரசாத் ஆகியோரின் ஆணைக்கிணங்க சித்தூர் கட்ட மஞ்சி சாலையில் முதற்கட்டமாக அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் இருபுறமும் 100 அடி வரை அளந்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தோம். தற்போது தனியாருக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்து கட்டிய கட்டிடங்களை அகற்றி வருகிறோம். சில கட்டிடங்கள் கட்டிட உரிமையாளர்களின் ஒப்புதல் பெற்று அகற்றி வருகிறோம்.

மிக விரைவில் சித்தூர் கட்டமஞ்சி சாலை 100 அடி சாலையாக மாற்றி அமைக்க அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதே போல் சித்தூர் மாநகரத்தில் முக்கிய சாலைகள் அனைத்தையும் அகலப்படுத்தி நான்கு வழி சாலைகளாக அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். மிக விரைவில் சித்தூர் மாநகர மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமாக சித்தூர் மாநகரத்தை உருவாக்குவோம். அதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.