பேரவையில் நேற்று சீர்காழி பன்னீர்செல்வம்(திமுக) பேசியதாவது: கலைஞர் அறிமுகப்படுத்திய சிற்றுந்து திட்டம் நாட்டில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது நகர்ப்புறங்களில் ஒட்டிய ஊரகப்பகுதிகளிலும் போக்குவரத்து சேவையை வழங்கிடும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் சுமார் 2000 வழித்தடங்களில் சிற்றுந்து திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த சிற்றுந்து திட்டத்தை அரசே செயல்படுத்த வேண்டும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை தொழில் முனைவோராக உயர்த்துவதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முதலமைச்சரின் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வரும் ஆண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.75 கோடி நிதி ஒதுக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.