Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சித்திரை திருநாள் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி: மலர இருக்கும் `விசுவாவசு’ ஆண்டில், மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி நிறையட்டும்; எண்ணங்கள் ஈடேறட்டும்; முயற்சிகள் முளைக்கட்டும்; வெற்றிகள் பதியட்டும்; புன்னகை பூக்கட்டும்; மன நிறைவை வழங்கும் மங்கள ஆண்டாக அமையட்டும். உலகெங்கும் வாழும் தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் இதயமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு’ நல்வாழ்த்துகள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: தமிழர்களின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்க வழி ஏற்படுத்தும் வகையிலும் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். இந்த விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு அனைவரது வாழ்வும் ஏற்றம் பெற உதவ வேண்டும். அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: இளவேனில் காலத்தின் தொடக்கமாக மலரும் பொன்னாள். இலைகளையும், மொட்டுக்களையும், பூக்களையும், காய்களையும், கனிகளையும் தந்து, இயற்கைத் தாய் நம்மைக் களிப்படையச் செய்யும் காலம். மலரும் சித்திரையை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துகள்.

ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன்: தமிழ்ப் புத்தாண்டு தினமானது அனைத்து மக்களுக்கும், அன்பையும், நிறைந்த ஆரோக்கியத்தையும், மிகுந்த மகிழ்ச்சியையும், வெற்றிகளையும் வாரி வழங்கும் ஆண்டாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: மக்களுக்கு, வெற்றிகள் குவிக்கும் ஆண்டாக, நன்மைகள் பிறக்கும் ஆண்டாக, ஒளி பிறக்கும் ஆண்டாக, மகிழ்ச்சி நிலைக்கும் ஆண்டாக அமைய பாஜக சார்பிலே என் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக செயல் தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி செகரட்டரி ஜெனரல் மு.பன்னீர்செல்வம், மண் பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்க தலைவர் சேம.நாராயணன்,  முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.