ஹாங்காங்: சீனாவின் தன்னாட்சி பிரதேசமாக ஹாங்காங் விளங்கி வருகிறது. ஹாங்காங்கில் ஜனநாயக உரிமைகளுக்காக ஜனநாயக கட்சி குரல் கொடுத்து வந்தது. 1994ல் தொடங்கப்பட்ட இந்த கட்சிக்கு சட்டப்பேரவை மற்றும் மாவட்ட கவுன்சில்களில் ஏராளமான உறுப்பினர்கள் இருந்தனர். 2019ல் நடந்த இளைஞர்கள் போராட்டத்திற்கு பின்னர் ஜனநாயகத்துக்கு ஆதரவாக செயல்படுவர்களை ஒடுக்கும் வகையில் சீன அரசு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தது.
இதனால் ஜனநாயக கட்சியின் செயல்பாடுகளும் குறைய தொடங்கியது. இந்த நிலையில் ஜனநாயக கட்சியை கலைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் 97 சதவீத உறுப்பினர்களும் வாக்களித்து தங்களுடைய இசைவை தெரிவித்துள்ளனர் என்று ஜனநாயக கட்சியின் தலைவர் லோ கின் ஹேய் தெரிவித்தார்.


