சாங்ஸூ: சீனா ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நேற்று, சீன வீராங்கனை வாங் ஸியி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சீனாவின் சாங்ஸூ நகரில் சீனா ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வந்தன.
போட்டிகளின் தொடர்ச்சியாக, மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு சீன வீராங்கனைகள் வாங் ஸியி (25), ஹான் யுயி (25) தகுதி பெற்றனர். நேற்று நடந்த இறுதிப் போட்டியின் துவக்கம் முதல் வாங் ஸியியின் கையே ஓங்கி இருந்தது. துடிப்புடன் அபாரமாக ஆடிய அவர் 21-8, 21-13 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.