சீனா, தைவான் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு: கடலில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்க தைவான் ராணுவம் பயிற்சி
தைவான்: சீனா, தைவான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் கடல் வழியாக சீன படைகள் நுழைய முயன்றால் அதனை முறியடிப்பது எப்படி என தைவான் ராணுவம் போர் ஒத்திகை மேற்கொண்டுள்ளது. சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. சமீபத்தில், தைவானை சுற்றி சீனா போர் ஒத்திகைகளை நடத்தியது மற்றும் தைவான் தனது இறையாண்மையை காக்க தயார் நிலையில் இருப்பதாக கூறியுள்ளது. இதனால் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. தைவானில் சீனாவின் விமானப்படை பறந்தது, மற்றும் தைவான் தனது ராணுவப் படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் தைவானின் சுதந்திரத்தை சீனா அங்கீகரிக்காததாலும், தைவானை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர சீனா முயற்சிப்பதாலும் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா தைவானுக்கு ஆதரவாக உள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையே மோதலை அதிகரிக்க வழிவகுத்து வருகிறது. தைவான், சீனாவின் அழுத்தத்திற்கு பணியாது என்றும், தனது ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் பாதுகாக்கும் என்றும் உறுதியாக உள்ளது. இதனிடையே கடல் வழியாக சீன படைகள் நுழைய முயன்றால் அதனை முறியடிப்பது எப்படி என தைவான் ராணுவம் போர் ஒத்திகை நடத்தி வருகிறது. கரையில் இருந்த பீரங்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் கடலில் உள்ள எதிரி இலக்குகளை நோக்கி தாக்குதல் தொடுக்கவும். படையில் சென்று நேருக்கு நேர் மோதவும் அவர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.