சென்னை: நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை முதல்வர் நாளை தொடங்கி வைக்க உள்ளார் என்று தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை முதல்வர் தொடங்கி வைக்கிறார். நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 1.256 முகாம்கள் நடத்த திட்டமீட்டுள்ளனர். சனிக்கிழமைதோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறும்.
Advertisement