புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர் கிஷோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற பார்க்கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,\\” காலணியை விசிய நபர், தான் செய்த செயலை தொடர்ந்து நியாயப்படுத்தி பேசிவருகிறார். மீண்டும் அதுபோன்ற செயலை செய்ய உள்ளதாக கூறியுள்ளார். இது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். எனவே மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கும் விதமாக தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள்,\\” இந்த விஷயத்தில் தலைமை நீதிபதி மன்னித்து, வழக்கறிஞர் கிஷாரை விடுவிக்க கூறியுள்ளார். எனவே மேலும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் அதே நேரத்தில் வரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் விதமாக உரிய வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து வெளியிடலாம். அதற்கான ஆலோசனைகளை வேண்டுமானால் உச்ச நீதிமன்ற பார்க்கவுன்சில் தரப்பில் வழங்கலாம் என உத்தரவிட்டனர்.
