Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கடலூர் துறைமுகத்தை இயக்குவதற்காக மஹதி கடலூர் போர்ட் அன்ட் மேரிடைம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

கடலூர் துறைமுகத்தை தனியார் பங்களிப்புடன், துறைமுக இயக்கு நிறுவனத்தை தேர்ந்தெடுத்து இயக்குவதற்கு தமிழ்நாடு கடல்சார் வாரியத்தால், இணையவழி ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டது. இந்த ஒப்பந்தப்புள்ளியில் தகுதி படைத்த துறைமுக இயக்கு நிறுவனமாக மஹதி இன்ஃப்ரா சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (Mahathi Infra Services Private Limited) நிறுவனத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிறுவனத்தின் சிறப்புப் பயன்பாட்டு நிறுவனமான Special Purpose Vehicle (SPV) நிறுவனத்தின் திருவாளர்கள் மஹதி கடலூர் போர்ட் அன்ட் மேரிடைம் பிரைவேட் லிமிடெட் (Mahathi Cuddalore Port and Maritime Private Limited) நிறுவனத்துடன் ஒப்பந்தம் இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு கடல்சார் வாரியம் மற்றும் திருவாளர்கள் மஹதி கடலூர் போர்ட் அன்ட் மேரிடைம் பிரைவேட் லிட் நிறுவனத்திற்கும் இடையே கையொப்பமிடப்பட்டது.