Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சர்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கும் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்-க்கு வாழ்த்துக்கள்: டிடிவி தினகரன்

சென்னை: கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்த குகேஷ்-க்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கனடாவில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டியில் (FIDE Candidates Chess Tournament 2024) சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற பெருமையை நிகழ்த்தியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 17 வயதான குகேஷ் அவர்கள், அடுத்தடுத்து நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் வெற்றிவாகை சூட நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சாதனை படைத்த குகேஷ்:

கனடாவில் டொரோண்டோ நகரில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் தொடரில் 8 வீரர்கள் மற்றும் 8 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார்.  இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்த குகேஷ்-க்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.