Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வழித்தட தூண்களில் விளம்பர பலகை வைத்து மாற்று வருவாய் ஈட்ட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம்!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் வழித்தட தூண்களில் விளம்பர பலகை வைத்து மாற்று வருவாய் ஈட்ட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மீனம்பாக்கம், ஆலந்தூர், சின்னமலை, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு மெட்ரோ வழித்தட தூண்களில் விளம்பரம் செய்வதற்கான உரிமைகள் Mudra Ventures நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் புது வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை உள்ள வழித்தட தூண்களில் விளம்பரம் செய்யும் உரிமைகளுக்கான ஒப்பந்தம் விரைவில் வெளியிடப்படும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், நிலையான தன்மை மற்றும் மாற்று வருவாய் ஈட்டுதல் (மெட்ரோ இரயில் சேவை வருவாய் கட்டணம் அல்லாத) செயல்பாடுகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக, மீனம்பாக்கம் மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ வரை, அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ முதல் சின்னமலை மெட்ரோ மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ முதல் கோயம்பேடு மெட்ரோ வரை உள்ள வழித்தட தூண்களில் விளம்பரம் செய்வதற்கான உரிமைகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சென்னையை சேர்ந்த Mudra Ventures நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

இது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் முக்கிய மாற்று வருவாய்களான விளம்பரம், சில்லறை வணிகம் மற்றும் அலுவலக பணி இடங்கள் வழங்குவதன் மூலமாகவும் இயக்க செலவுகளை ஈடு செய்ய மேலும்உதவுகிறது. மேலும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் விம்கோநகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் வரை உள்ள வழித்தட தூண்களில் விளம்பரம் செய்யும் உரிமைகளுக்கான ஒப்பந்தத்தை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துக் கொள்கிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.