சென்னை: சென்னை வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு முக்கியமானது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மீனவர்களின் நலனை காக்கவே கட்சத்தீவை மீட்க வேண்டும் என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க பிரதமர், வெளியுறவு அமைச்சருக்கும் இதுவரை 76 கடிதங்கள் எழுதியுள்ளேன். தொடர் வலியுறுத்தல் காரணமாக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க 125 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் கூறினார்
Advertisement


