Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜூன் 2 வரை சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளில் ஒரு நாள் விட்டு ஒருநாள் தான் குடிநீர் வழங்கப்படும் : குடிநீர் வாரியம் அறிவிப்பு!!

சென்னை : ஜூன் 2 வரை சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளில் ஒரு நாள் விட்டு ஒருநாள் தான் குடிநீர் வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

"தென்மேற்கு பருவமழை தீவிரமடைவுதற்கு முன்னதாக நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் கடல்சார் பணிகள் மற்றும் நிலைய பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், 24.05.2024 முதல் 02.06.2024 வரை (10 நாட்களுக்கு மட்டும்) மண்டலம்-9 (பகுதி), மண்டலம்-13(பகுதி), மண்டலம்-14 மற்றும் 15-க்குட்பட்ட பகுதிகள் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும் என்று குடிநீர் வாரியம் தகவல் அளித்துள்ளது.

9 - தேனாம்பேட்டை (பகுதி) : மந்தைவெளி, மைலாப்பூர், இராஜா அண்ணாமலைபுரம், நந்தனம், திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை

13 -அடையாறு (பகுதி) : மந்தைவெளி, பெசன்ட் நகர், மடிவின்கரை, பேபி நகர், தந்தை பெரியார் நகர், கருணாநிதி நகர்,கலாஷேத்ரா காலனி, வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவள்ளுவர் நகர், AGS காலனி

14 பெருங்குடி : கொட்டிவாக்கம், பெருங்குடி, பாலவாக்கம்,காவேரி நகர், திருமலை நகர், பள்ளிகரணை, மடிப்பாக்கம், உள்ளகரம்-புழுதிவாக்கம், காமாட்சி காலனி, ஜல்லடியம்பேட்டை

15 - சோழிங்கநல்லூர்: நீலாங்கரை, சரஸ்வதி நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், எழில் நகர், கண்ணகி நகர், உத்தண்டி, பனையூர், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி

தாம்பரம் மாநகராட்சி

எனவே, பொதுமக்கள் மேற்கூறிய குடிநீர் விநியோக முறையை கவனத்தில் கொண்டு தேவையான குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கூடுதல் தகவல்களுக்கு கீழ்க்கண்ட கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பகுதிகள்

9- தேனாம்பேட்டை (பகுதி) 81449-30909

13 அடையாறு (பகுதி) 81449-30 913

14 பெருங்குடி 81449-30 914

15 - சோழிங்கநல்லூர் 81449-30 915

தாம்பரம் மாநகராட்சி பகுதிப் பொறியாளர் தலைமைப் பொறியாளர் 94429-76905 செயற்பொறியாளர் 82488-88577

அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்,"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.