சென்னை - ஹவுரா ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் ஏற முடியவில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது: தயாநிதி மாறன் எம்.பி.
சென்னை: சென்னை - ஹவுரா ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் ஏற முடியவில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது என தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்துள்ளார். "முன்பதிவு செய்த பயணிகள் ரயிலில் ஏற முடியாமல் இருக்கைகள் கிடைக்காமல் தவிப்பதும் இது முதல் முறை அல்ல. ரயில் சேவை பரிதாபகரமான நிலையில் இருப்பதற்கு ரயில்வே அமைச்சகத்தின் அலட்சியமான செயல்பாடே காரணம். முன்பதிவு பயணிகள் பயணிக்க முடியாதது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமல்லாது, பாதுகாப்பு பிரச்சனையையும் ஏற்படுத்தக் கூடியது" எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஹவுரா ரயில் பயணிகளின் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து தெற்கு ரயில்வே விசாரணை நடத்த தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்.