சென்னை கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சென்னை: சென்னை கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் நந்தம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்தர்வர்கள் கீழே குதித்து தப்பினர். தகவல் அறிந்த தாம்பரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.