Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடப்பாண்டில் ரூ.119.12 கோடியில் 41 குளங்கள் புனரமைப்பு

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடப்பாண்டில் ரூ.119.12 கோடி மதிப்பீட்டில் 41 குளங்கள் புனரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. திருவொற்றியூர் மண்டலம், வார்டு-3 எண்ணூர் விரைவுச் சாலை, அன்னை சிவகாமி குளத்தில் ரூ.8.40 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-4 ஏ.டி. காலனி ஏரியில் ரூ.6 கோடி, கே.எச். சாலை, ரயில்வே குளத்தில் ரூ.5.50 கோடி, வார்டு-6 அம்பேத்கர் குளத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மணலி மண்டலம், வார்டு-16 பர்மா நகர் குளத்தில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டிலும், ஆண்டார்குப்பம் மயானபூமியில் ரூ.27 லட்சம், சடையான்குப்பம், இருளர் காலனி குளத்தில் ரூ.2.29 கோடி, குளக்கரை குளத்தில் ரூ.43 லட்சம், எலந்தனூர் குளத்தில் ரூ.56 லட்சம், கே.ஜி.எல். நகர் மயானபூமி குளத்தில் ரூ.1 கோடி, ஆண்டார்குப்பம் குளத்தில் ரூ.1.50 கோடி, காமராஜபுரம் குளத்தில் ரூ.1.50 கோடி, வார்டு-17 வடப்பெரும்பாக்கம் குளத்தில் ரூ.1.80 கோடி, விநாயகபுரம் மயானபூமி குளத்தில் ரூ.2.02 கோடி, வடப்பெரும்பாக்கம் சாமுவேல் நகர் மயானபூமி குளத்தில் ரூ.2.08 கோடி, கதகுழி மயானபூமி குளத்தில் ரூ.3.50 கோடி, கொசப்பூர்-ஸ்ரீவேம்புலியம்மன் கோயில் குளத்தில் ரூ.5.50 கோடி, கொசப்பூர், ஸ்ரீசெல்லியம்மன் கோயில் குளத்தில் ரூ.2.67 கோடி, தீயம்பாக்கம் குளத்தில் ரூ.1.34 கோடி, தீயம்பாக்கம்-காந்திநகர் குளத்தில் ரூ.2.37 கோடி, சின்னத்தோப்பு குளத்தில் ரூ.2.37 கோடி, செட்டிமேடு, சக்தியம்மன்

கோயில் அருகில் உள்ள குளத்தில் ரூ.1.25 கோடி, அரியலூர் எச்சன்குளத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலும் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வார்டு-18 அரிகிருஷ்ணாபுரம் குளம் ரூ.83 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு-19 மாசிலாமணி நகர் குளம் ரூ.1.79 கோடி, மஞ்சம்பாக்கம் குளம் ரூ.10 கோடி, மஞ்சம்பாக்கம்-மாத்தூர் குளம் ரூ.1 கோடி, ஆசிரியர் காலனி குளம் ரூ.50 லட்சம், மாத்தூர்-அத்திக்குளம் ரூ.1 கோடி, வார்டு-21 தாமரைக்குளம் ரூ.3.40 கோடி, திருவொற்றியூர்-பொன்னேரி-பஞ்செட்டி சாலை எம்.எஃப்.எல் குளம் ரூ.5 கோடி, வார்டு-22 தேவராஜன் தெரு ராமலிங்க குளம் ரூ.69 லட்சம் மதிப்பீட்டிலும் புனரமைக்கப்படவுள்ளன. மாதவரம் மண்டலம், வார்டு-26 பெருமாள் கோயில் குளம் ரூ.1.71 கோடி மதிப்பீட்டிலும், ஜெ.ஜெ. நகர் குளம் ரூ.23 லட்சம், வார்டு-28 மாதவரம் செங்குன்றம் சாலை, டால்கோ குளம் ரூ.1.76 கோடி, வார்டு-32 பேசின் ஏரி ரூ.7.12 கோடி மதிப்பீட்டிலும் புனரமைக்கப்படவுள்ளது.

தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-34 யூனியன் கார்பைட் குடியிருப்பில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு-38 எண்ணூர் நெடுஞ்சாலை (விரிவு-2)ல் ரூ.5.29 கோடி, விரிவு-3ல் ரூ.5.18 கோடி, விரிவு-4ல் ரூ.3.51 கோடி, வார்டு-47 பாரதி நகர் பூங்கா-கால்வாய் சாலையில் ரூ.6.24 கோடி மதிப்பீட்டிலும் 5 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, ரூ.119.12 கோடி மதிப்பீட்டில் 41 குளங்களை புனரமைத்து மேம்படுத்திட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகளுக்கான ஒப்பம் கோரப்பட்டு குளங்கள் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. குளங்களில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகளின்போது, குளங்களை ஆழப்படுத்தி அகலப்படுத்துதல், கரைகளைப் பலப்படுத்துதல், சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

நடப்பாண்டில், சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ், திருவொற்றியூர் மண்டலம், வார்டு-7 கார்கில் நகர் குளத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டிலும், மாதவரம் மண்டலம், வார்டு-27 மாதவரம் ஏரியில் ரூ.7.22 கோடி, மாதவரம் பால் பண்ணை காலனி, ஆவின் குளத்தில் ரூ.59 லட்சம், தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-38 எண்ணூர் நெடுஞ்சாலை விரிவு-1ல் உள்ள குளத்தில் ரூ.2.55 கோடி, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-151 எஸ்.வி.எஸ். நகர் குளம் ரூ.4.89 கோடி மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.25.25 கோடி மதிப்பீட்டில் 5 குளங்களில் புனரமைப்புப் பணிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிண்டி, ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் 14,070 கன மீட்டர் (அ) 0.50 மில்லியன் கன அடி கொள்ளளவு தண்ணீர் தேக்கம் கொண்ட ஏற்கனவே உள்ள 2 குளங்களில் அகலப்படுத்துதல் மற்றும் ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது 19,560 கனமீட்டர் (அ) 0.69 மில்லியன் கன அடி கொள்ளளவு தண்ணீர் தேக்கும் திறனுடன் புனரமைக்கப்பட்டது. மேலும், இந்த வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாக 4 குளங்கள் 1,10,800 கன மீட்டர் (அ) 3.91 மில்லியன் கன அடி கொள்ளளவு தண்ணீர் தேக்கும் திறனுடன் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த 4 குளங்களில் கூடுதலாக சேர்த்து 45,760 ச.மீ. பரப்பளவில், 2,28,800 கனமீட்டர் (அ) 8.07 மில்லியன் கன அடி கொள்ளளவுத் திறனுடன் மழைநீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் மூலம் கிண்டி, மடுவின்கரை, வேளச்சேரி மற்றும் ஐந்து பர்லாங் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெள்ளப் பாதிப்புகள் பெரிதும் குறையும்.

மேலும், நீர்நிலைகள் புனரமைப்புப் பணிகளுக்காக சமூகப் பொறுப்புணர்வு நிதி பெறுவதற்கு சென்னை மாநகராட்சியின் சார்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்முயற்சியில் இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிறுவனம் 22 நீர்நிலைகள் புனரமைப்புப் பணிக்கு அனுமதி வேண்டி கடிதம் வழங்கியுள்ளது. மேலும், பல நீர்நிலைகள் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின்கீழ் புனரமைக்க சென்னை மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.