சென்னையில் பேருந்து சேவையில் எந்த பாதிப்பும் இல்லை, 100% பேருந்துகள் இயங்குகிறது: போக்குவரத்து துறை தகவல்
சென்னை: சென்னையில் பேருந்து சேவையில் எந்த பாதிப்பும் இல்லை, 100% பேருந்துகள் இயங்குகிறது என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் "சென்னையின் 32 பணிமனைகளில் இருந்து 650க்கும் மேற்பட்ட வழித்தடங்களுக்கு வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்து பணிமனைகளிலும் ஒரு பேருந்து கூட ஊழியர் இல்லாமல் நிறுத்தி வைக்கப்படவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் சீராக இயங்குவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது" என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.