சென்னை: சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவியது. சென்னை விமான இயக்குனர் அலுவலகத்துக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விமான நிலைய வாகன நிறுத்தும் இடம், விமான எரிபொருள்கள் நிரப்பும் இடம், சரக்கு பார்சல் ஏற்றும் இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான் என்று சோதனையில் தெரிய வந்துள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு கடந்த இரண்டு வாரங்களில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக, வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
Advertisement