Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்​னை - விளாடிவோஸ்​டாக் வழித்தட திட்டத்தால், இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பு அதிகரிப்பு: புடின்

டெல்லி: சென்​னை - விளாடிவோஸ்​டாக் வழித்தட திட்டத்தால், இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் 23வது இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வருகை புரிந்துள்ளார். 2021ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல்முறை ரஷ்ய அதிபர் இந்தியா வந்திருப்பது கவனிக்கத்தக்கது. கடைசியாக தியான்ஜினில் நடந்த SCO மாநாட்டில் இருவரும் சந்தித்து பேசினர். மேலும் உக்ரைனுக்கு எதிரான போர் தொடங்கிய பிறகு இந்தியா வந்திருக்கிறார்.

முன்னதாக ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். இதையடுத்து குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பிற்பகல் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் ஆலோசனை நடத்தினர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதில் பேசிய பிரதமர் மோடி

இந்தியா - ரஷ்யா இடையேயான நட்பு துருவ நட்சத்திரம் போல நிலைத்துள்ளது. இந்தியா - ரஷயா உறவின் முக்கிய தூணாக எரிசக்தி பாதுகாப்பு உள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் நிலையில் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். 80 ஆண்டுகளாக பல ஏற்றத் தாழ்வுகளை உலகம் சந்தித்தபோதும் இந்தியா-ரஷ்யா உறவு நிலையாக இருக்கிறது. 30 நாள் குழு சுற்றுலா விசாவையும் அறிமுகப்படுத்தவுள்ளோம். ரஷ்ய குடிமக்களுக்கு விரைவில் இலவச 30 நாள் சுற்றுலா விசா வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

புடின் பேசுகையில்,

Chennai-Vladivostok வழித்தட திட்டத்தால், இந்தியாவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவும், ரஷ்யாவும் சுதந்திரமான நாடுகள். இந்திய ராணுவம் நவீன வசதிகளை பெற ரஷ்யா உதவி செய்து வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் மூலம் மக்களுக்கு மலிவான விலையில் மின்சாரம் கிடைக்கிறது. இந்தியாவுக்கு எண்ணெய்' எரிவாயு, நிலக்கரியை வழங்கும் நம்பிக்கைக்குரிய நாடு ரஷ்யா. தமிழ்நாட்டில் முக்கியத் திட்டத்தை செயல்படுத்துகிறோம். கூடங்குளத்தில் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். 6 அணுமின் நிலையங்களில் 2 ஏற்கெனவே மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன; அணுமின் நிலையங்களை முழு திறனுக்கு கொண்டு வருவது, இந்திய எரிசக்தி தேவைக்கு பங்களிப்பு செய்யும்.