Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இருமுறை உயர்ந்து விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இருமுறை உயர்ந்து விற்பனை ஆகிறது. காலையில் ஆபரணதங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்த தங்கம் விலை தற்போது ரூ.880 உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து 72,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று பவுனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில், ஒரு கிராம் தங்கம் விலை மீண்டும் ரூ.9 ஆயிரத்தை நெருங்குவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும், இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த மே மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 15ம் தேதி ஒரு பவுன் ரூ.68,880-க்கு விற்பனையாகியது. அதிகபட்சமாக 8ம் தேதி ஒரு பவுன் ரூ.73,040க்கும் விற்பனையாகியது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ.75 ஆயிரத்தை தங்கம் விலை நெருங்கிய நிலையில் இந்த மாதம் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. உலகப் பொருளாதார நெருக்கடிகள் முடிவடைந்ததாலும், போர் பதற்றங்கள் குறைந்ததாலும், அதன் தாக்கம் தங்கத்தின் விலையில் எதிரொலித்தது.

அதன்படி, கடந்த மே 31ம்தேதி ஒரு கிராம் ரூ.8,920-க்கும், ஒரு பவுன் ரூ.71,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று விடுமுறை நாளாகும். அதனை தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான இன்று காலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,950-க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.71,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது இரண்டாவது முறையாக தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.72,480க்கும் கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,060க்கு விற்கப்படுகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கள் விலை உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதி்ர்ச்சி அடைந்துள்ளனர்.