சென்னை: சென்னையில் இருந்து 166 பயணிகளுடன் மும்பை புறப்பட்டபோது ஓடுதளத்திலேயே இண்டிகோ விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓடுபாதையில் ஓடிக் கொண்டிருந்தபோது விமானத்தின் பின்பக்க டயர் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. ஓடுதளத்தில் பயங்கரமாக குலுங்கியபடி ஓடிய விமானத்தை, சாமர்த்தியமாக இயக்கி நிறுத்தினார் விமானி. பழுதடைந்த டயர் மாற்றப்பட்டு, 2 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது
+
Advertisement


