Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னை, மதுரையில் ‘ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025!’ : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவிப்பு!

சென்னை : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (19.6.2025) சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (FIH) ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தமிழ்நாடு 2025 போட்டியின் அதிகாரப்பூர்வ இலட்சினையை (Logo) வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (FIH) ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தமிழ்நாடு 2025 போட்டி நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (FIH) ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தமிழ்நாடு 2025 போட்டியின் இலட்சினையொட்டி (Logo) நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை:

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் சார்பில் ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 போட்டிகள், வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது

இப்போட்டிகள், ஹாக்கி விளையாட்டில் பெருமை மிகுந்த சென்னை மற்றும் மதுரை நகரங்களில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. உலகதரத்தில், போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

ஏற்கனவே, தமிழ்நாடு அரசின் சார்பில் பின்வரும் ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட்டு, சாதனைகளை படைத்திருக்கிறோம்.தற்போது, ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பையின் 14ஆவது தொடரை நடத்தவுள்ளோம். இதில் உலகளாவிய நாடுகளில் இருந்து சுமார் 24 அணிகள் பங்கேற்கவுள்ளன.

தமிழ்நாடு அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் 65 கோடி ரூபாய் இந்த நிகழ்ச்சிக்காக, இந்த விளையாட்டிற்காக ஒதுக்கி தந்திருக்கிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில், செயல்படுத்திய திராவிட மாடல் அரசு, தற்போது இந்த போட்டியையும் மிகச்சிறப்பாக நடத்தவுள்ளது”

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கோயம்புத்தூரில் இருக்கின்ற ஹாக்கி ஸ்டேடியம் International Standard தான். சென்னையில் எல்லா வசதிகளுடன் கூடிய ஒரு ஸ்டேடியம் இருப்பதினால் சென்னையில் நடத்த முடிவு செய்தோம்.

சென்னையில் மட்டும் இருக்கக்கூடாது தென் தமிழ்நாட்டிலும் இதை நடத்த வேண்டும் என்பதற்காக, இதை நடத்தும் போது Infrastructure Development பண்ண வேண்டும் என்பதற்காக மதுரையிலும் நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளோம்.

தென் தமிழ்நாட்டிலிருந்து நிறைய Hockey Players வருகிறார்கள். அவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும், உற்சாகப் படுத்தவேண்டும் என்பதற்காக தெற்கு பகுதியிலும் நடத்துகின்றோம்” என்று தெரிவித்தார்.