Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாலிசிக்கள் உரிமை மாற்றம்: எல்ஐசி எச்சரிக்கை

மும்பை: எல்ஐசி பாலிசிக்கள் உரிமை மாற்றம் செய்யப்படுவது தொடர்பாக வெளிவந்த தகவல்களுக்கு அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: எல்ஐசி பாலிசிதாரர்களின் பாலிசிக்களை எல்ஐசி நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு மாற்றாக விற்பனை அல்லது உரிமை மாற்றம் அல்லது வேறுவிதமாக பெற நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக சமீபத்திய செய்திக் கட்டுரைகள் வாயிலாக அறிகிறோம். இது தொடர்பாக கீழ்க்கண்ட விளக்கங்களை, பாலிசிதாரர்கள் நலன் கருதி அளித்துள்ளோம்.

அதாவது, எல்.ஐ.சி நிறுவனத்திற்கு அத்தகைய நிறுவனங்களுடன் அல்லது அவற்றின் சேவைகளுடன் எந்தவித தொடர்பும் இல்லை. இது தொடர்பான முன்னாள் எல்.ஐ.சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அறிக்கைகள் அவர்களுடைய சொந்த கருத்துகள் தான். இதற்குஎல்.ஐ.சி நிறுவனம் எந்த வித பொறுப்புகளையும் ஏற்காது. மேலும், எல்.ஐ.சி பாலிசிகள் விற்பனை, பரிமாற்றம் அல்லது உரிமை மாற்றம் ஆகியவை காப்பீட்டு சட்டம் 1938, பிரிவு 38ன் படி மேற்கொள்ளப்படவேண்டும்.

தற்போது அமலில் உள்ள சட்டங்களின் படி, மேற்கண்ட பரிவர்த்தனைகள் பாலிசிதாரர் நலன் சார்ந்தது அல்ல, பொது நலனுக்கு உகந்தது அல்ல. மாறாக, பாலிசிகளை வர்த்தகம் செய்யும் நோக்கிலானது. இந்த காரணங்களுக்காக மேற்கண்ட நடவடிக்கைகளை எல்.ஐ.சி நிறுவனம் நிராகரிக்கலாம். எனவே, பாலிசிதாரர்கள் இது தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

இது தொடர்பான முடிவுகள் பாலிசியின் ஆயுள் காப்பீட்டு பலன்கள் மற்றும் பாலிசிதாரரின் நிதிப் பாதுகாப்பை பாதிக்கலாம் எனவும் தெரிவித்து கொள்கிறோம். எந்தவொரு முடிவை செயல்படுத்துமுன் எங்கள் கிளைகளில் உள்ள எல்ஐசி அதிகாரிகளுடன் கலந்தாலோசியுங்கள். மேலும் விவரங்களுக்கு, மும்பை மத்திய அலுவலகத்தில் உள்ள நிர்வாக இயக்குனர் ed_cc@licindia.com மெயிலில் தொடர்பு கொள்ளலாம் என்று எல்ஐசி தெரி வித்து ள்ளது.