சிபிஐ அதிகாரிகள் இன்று கரூர் திரும்புகின்றனர்: தவெக நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமாரிடம் விசாரணை?
கரூர்: கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது தொடர்பாக சிபிஐ குழுவினர் கடந்த 22ம் தேதி கரூர் நீதிமனறத்தில் எப்ஐஆர் தாக்கல் செய்தனர். அதில் தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொது செயலாளர் நிர்மல்குமார், உள்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் நகலை தவெக வழக்கறிஞர்கள் பெற்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் இன்று (28ம்தேதி) ஆஜராகி விளக்கம் அளிக்க சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற சிபிஐ அதிகாரிகள் இன்று காலை கரூர் திரும்ப உள்ளனர். அப்போது அவர்கள் முன் தவெக நிர்வாகிகள் ஆஜராவார்கள் என்றும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.


