ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு : கைதானவர்களுக்கு நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கோட்டாவில் ரயில் டிக்கெட் பதிவு!!
சென்னை :சென்னை தாம்பரத்தில் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், கைதானவர்கள், பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பரிந்துரையின் பேரில், அவருக்கான எமர்ஜென்சி கோட்டா டிக்கெட்டில் ரயிலில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.