தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை-ஓசூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் மில்லுக்கு எதிரில், ஒட்டகம் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. தங்கள் பகுதிக்கும், ஒட்டகத்துக்கும் சம்மதமே கிடையாது என்பதால், அப்பகுதி மக்கள் தர்மபுரி போலீசாருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் ஒட்டகம் இறந்து கிடந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டு, ஒட்டகம் எங்கிருந்து வந்தது, எப்படி இறந்தது? என விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement


